மீம்ஸ் போடும் மாம்ஸ்களா…. நோ சூடு… நோ சொரணை… நோ பிராப்ளம்.. : நித்யானந்தா

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா…. நோ சூடு… நோ சொரணை… நோ பிராப்ளம்.. : நித்யானந்தா

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என நித்யானந்தா கூறி உள்ளார்.
சென்னை

கைலாசா என்ற பெயரில் தனி நாடு அமைக்கப்போவதாக நித்யானந்தா ஆரம்பித்த காமெடி, தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையும் தனக்கு சாதகமாக்கி பேசி வருகிறார், நித்யானந்தா.

உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

நித்யானந்தா வெளியிட்டுள்ள சமூக வீடியோவில் நகைச்சுவையான ஆங்கிலத்தில் நோ சூடு, நோ சொரணை, நோ பிராப்ளம் என விளக்கமளித்தார். மேலும் தனது சத்சங்கத்தின் போது சினிமா ஹீரோக்கள் போன்று பஞ்ச் வசனங்கள் பேசுவது ஏன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை கூறிய நித்யானந்தா தனது சீடர்களை ஞானப் போரில் கலந்து கொள்ளுமாறும் வீர உரையாற்றி உள்ளார்.

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என கூறி உள்ளார்.

கர்நாடக ஐகோர்ட் அவருக்கு எதிரான பிடியை இறுக்கியிருக்கிறது. வரும் 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லவேண்டும் என்று அம்மாநில போலீசாரை கர்நாடக ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )