பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் : பள்ளிக் கல்வித் துறை செயலாளர்

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் : பள்ளிக் கல்வித் துறை செயலாளர்

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகப் பள்ளிக் கல்வியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல்தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )