பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை : டிஜிபி திரிபாதி

பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை : டிஜிபி திரிபாதி

பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

துக்ளக் விழாவின் ஆண்டு விழாவில் பேசிய ரஜினியின் பெரியார் குறித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினி தான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை எனவும் மன்னிப்பும் கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டார்.

இதனால் அதிமுக அமைச்சர்களும், திமுக தலைவர்களும் ரஜினி குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மேலும் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )