தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது : எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது : எடப்பாடி பழனிசாமி உறுதி

மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
சென்னை

சென்னை தரமணியில் டிஎல்எஃப் நிறுவனத்தின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசும் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில் தொடங்குவதற்கான ஒற்றை சாளர முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 80,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என கூறினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி. சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )