சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் : டாக்டர் ராமதாஸ்

சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் : டாக்டர் ராமதாஸ்

சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உகான் நகரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 25 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரு நாட்களுக்கு மட்டுமே உணவு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அவசர உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

சீனாவின் உகான் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும். அவர்களை தாயகத்துக்கு அழைத்து வருவது நல்லதா? அங்கேயே பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நல்லதா? என்பதை அவர்களின் விருப்பத்தை அறிந்து இந்திய அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )