குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் : திமுக தோழமை கட்சிகள் முடிவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் : திமுக தோழமை கட்சிகள் முடிவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் தோழமை கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், குடியுரிமை திருத்த சட்டம் ,தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 2 முதல் 8-ந் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கையெழுத்து இயக்கத்திற்குப் பிறகு கையெழுத்து பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )