காவிரி நீரின் மாதிரி எடுத்து ஆய்வு செய்து நடவடிக்கை : ஜி.கே.வாசன் கோரிக்கை

காவிரி நீரின் மாதிரி எடுத்து ஆய்வு செய்து நடவடிக்கை : ஜி.கே.வாசன் கோரிக்கை

மேட்டூர் அணை தண்ணீரில் கர்நாடக கழிவுகள் கலப்பதை தடுக்க காவிரி நீரின் மாதிரி எடுத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் மேட்டூர் அணையின் தண்ணீரில் கர்நாடகாவின் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் உரிய இழப்பீட்டை பெறவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மேட்டூர் அணையின் தண்ணீரானது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மேட்டூர் அணை எப்போது நிரம்பும், அந்த தண்ணீர் எப்போது கிடைக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருப்பார்கள். அப்பேற்பட்ட சூழலில் மேட்டூர் அணையின் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்தால் எப்படி பயன் தரும். காத்திருந்த விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

தமிழக அரசு உடனடியாக மேட்டூர் அணையின் தண்ணீரை தூய்மைப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டாவுக்கு வந்து சேரும் காவிரி நீரில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் உண்மைத்தன்மைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )