உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி : மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி : மு.க.ஸ்டாலின்

2021-ல் நல்லாட்சி அமைந்திடும் வகையில் திமுகவின் வெற்றிப்பயணம் கம்பீரமாக தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் முக்கியமான ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி.

9 ஆண்டு காலமாக நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் கழக ஆட்சி மலரும். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையும், வாய்மையும் தி.மு.க.வுக்கு இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நமது வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது” என்பதை கழக நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தேன். அதையேதான் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்களிடமும் சொல்கிறேன்.

தனி மனிதர்களின் விருப்பு-வெறுப்பு-சுயநலத்தைவிட இயக்கத்தின் இலட்சியமும் அதற்கான வெற்றியும் முதன்மையானது என்பதையே செயற்குழுவில் எடுத்துரைத்தேன்.

நமது வெற்றிப்பாதையில் குறுக்கிடக்கூடிய தடைகள் வெளிப்புறத்தில் இருந்து வந்தாலும், உட்புறத்திலிருந்து உருவாக்கப்பட்டாலும், அதனைப் பக்குவமாகத் தகர்த்தெறிந்து முன்னேறிடும் ஆற்றல் உங்களிடம் உண்டு. உள்ளாட்சிக் களத்தில் 2020 வெற்றி. அதனைத் தொடர்ந்து 2021ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திடும் வகையில் மகத்தான வெற்றி என கழகத்தின் வெற்றிப் பயணம் கம்பீரமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )