cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Dhinasakthi

தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 537, வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் என மொத்தம் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 99-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 4,813 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,34,740 லிருந்து 8,35,280 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 5,04,844 ஆண்கள், 3,30,402 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 55,710 பேருக்கும், இதுவரை 1,53,86,025 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 55,919 மாதிரிகளும், இதுவரை 1,56,96,304 மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 627 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிககை 8 லட்சத்து 18ஆயிரத்து 147ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2பேர் தனியார் மருத்துவமனையிலும், 2பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,320 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.