டெல்லியில் உயர்ந்த கொரோனா பாதிப்பு- நேற்றை விட 94 % அதிகரிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் 11.88- சதவிதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பால் இரவு ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது.

எனினும், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைவிட 94 சதவீதம் அதிகம் ஆகும். மே 12 ஆம் தேதி டெல்லியில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் 11.88- சதவிதமாக உயர்ந்துள்ளது.