ஜனநாயக உச்சி மாநாடு பற்றிய சீன மற்றும் ரஷிய தூதர்களின் கூட்டு கட்டுரை

அமெரிக்கா தலைமையில் ஜனநாயக மாநாட்டை நடத்துவது குறித்து,
அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சின் காங், அமெரிக்காவுக்கான ரஷிய தூதர்
அனடோலி அன்டோனோவ் ஆகிய இருவரும் இணைந்து கட்டுரை ஒன்றை நவம்பர்
27-ஆம் நாள் வெளியிட்டனர். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கூறப்படும் ஜனநாயக
உச்சி மாநாட்டில் பனிப்போர் சிந்தனையே நிறைந்துள்ளது. இம்மாநாட்டை சீனாவும்
ரஷியாவும் உறுதியுடன் எதிர்க்கின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விழுமியங்கள்தூதாண்மை என்ற பெயரில் இடைவெளியையும் எதிரெதிர்
நிலையையும் உருவாக்கும் செயலை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளுக்கிடையே, பரஸ்பர மதிப்பு அளித்தல்,
ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுதல் போன்ற சர்வதேச உறவு கருத்துக்களைச்
செயல்படுத்த வேண்டும். சமூக அமைப்புமுறை, கருத்தியல், வரலாற்று, பண்பாடு,
வளர்ச்சி ஆகியவற்றில் வேறுபட்ட நிலையில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான
இணக்கமான சக வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்று இக்கட்டுரையில்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.