ஜனநாயகம் மற்றும் மனித உரிமை பிரச்சினை தொடர்பான கருத்தரங்கு

ஜெனிவாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவும், ரஷியப் பிரதிநிதிக் குழுவும் 18ஆம் நாள், “ஜனநாயகம் மற்றும் மனித உரிமை:பொது நாட்டம், வண்ணமயமான செயலாக்கம்” என்ற இணையக் கருத்தரங்கைக் கூட்டாக நடத்தின. ஜெனிவாவுக்கான சுமார் 60 நாடுகளின் பிரதிநிதிகள், தூதாண்மை அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட 130 பேர், இதில் கலந்து கொண்டு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை பிரச்சினை குறித்து விவாதம் நடத்தினர்.

சீனப் பிரதிநிதி லீ சுங் உரை நிகழ்த்துகையில், மக்கள், நாட்டின் உரிமையாளராக இருப்பது தான், உண்மையான ஜனநாயகம் ஆகும் என்று குறிப்பிட்டார்.