சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் 18ஆவது பேச்சுவார்த்தை

சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் 18ஆவது பேச்சுவார்த்தையில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 26ஆம் நாள் காணொளி வழியில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாவ் லிஜியன் 25ஆம் நாள் அறிவித்தார்.

இப்பேச்சுவார்த்தை, 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது, பலதரப்புவாதம், சர்வதேசப் பிரச்சினை முதலிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக விவாதிப்பார்கள் என்றும் சாவ் லிஜியன் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தையின் மூலம், ரஷியா மற்றும் இந்தியாவுடனான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்தக் கருத்துக்களை உருவாக்க வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கின்றது.