சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் 18ஆவது கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 26ஆம் நாள் காணொளி வழியாகப் பங்கெடுத்தார்.

வாங் யீ கூறுகையில், ரஷியா மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பெரிய நாடுகளின் பொறுப்பை ஏற்று, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்துவது, நோய் பரவல் தடுப்பது, பொருளாதார மீட்சிக்குப் பங்காற்றுவது, உலக அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பது முதலியவற்றுக்கு மூன்று நாடுகளின் திட்டங்களை வழங்க, சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

சீனா, ரஷியா, இந்தியா ஆகியவை, ஐ.நாவின் மையத் தகுநிலையையும், சமமான இறையாண்மை கோட்பாட்டையும் உறுதியாகப் பேணிக்காத்து, உண்மையான பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ராவ்ரோவ், ஜெய் சங்கர் ஆகிய இருவரும் கருதுகின்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு மூன்று நாடுகளும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.