சீன-அமெரிக்க உறவின் முக்கியத்துவம்:வாங் யீ

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உலக சிந்தனை கிடங்கு அமைப்பு மாநாட்டில் 20ஆம் நாள் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். இதில் சீன-அமெரிக்க உறவு பற்றிய நிலைப்பாட்டை அவர் ஆழமாக தெளிவுபடுத்தினார்.

மிக பெரிய வளரும் நாடான சீனாவும் மிக பெரிய வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவும், ஒன்றுக்கு ஒன்று உறவுகளை நன்றாகக் கையாள முடியுமா இல்லையா என்பது உலகின் எதிர்காலம் மற்றும் தலைவிதியுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி, வரலாற்று வளர்ச்சியின் சரியான திசையாகும். உலகமயமாக்கலின் போக்கு மாற்றப்பட முடியாதது என்று சுட்டிக்காட்டினார்.

தைவான் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கமளித்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் பைடனுடன் நடத்திய கொணொளி சந்திப்பில் கடுமையான எச்சரிக்கை விடுத்து, சீனாவின் உறுதியான நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.