சீனாவின் முதியோர் திருவிழா

சீனச் சந்திர நாட்காட்டியின் படி, ஆண்டின் ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாவது நாள், சோங்யாங் திருவிழாவாகும். இது, முதியோர் திருவிழாவாகவும் அழைக்கப்படுகின்றது.
“முதியோர்கள், மகிழ்ச்சியான இன்பமான வாழ்கையை வாழ வேண்டும்” என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் அக்கறையாகும்.
சாதாரண நாட்களில் அவர் பல பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் தனது தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு அரட்டை அடித்து நடந்து செல்வார்.
மூத்தோரை மதித்து நடத்தல், ஷிச்சின்பிங்கின் நிலையான நற்பண்பாகும். குறிப்பாக மூத்த தோழர்களை மதித்து, மூத்த ஊழியர்களின் மீது அவர் அக்கறை கொண்டு வருகின்றார்.