cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
சிறையில் உள்ள கைதிகளை வரும் 14 ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசலாம் :சிறைத்துறை அனுமதி - Dhinasakthi

சிறையில் உள்ள கைதிகளை வரும் 14 ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசலாம் :சிறைத்துறை அனுமதி

சிறையில் உள்ள கைதிகளை வரும் 14 ஆம் தேதி முதல் உறவினர்கள் நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் சிறையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சிறைக்கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 14 ஆம் தேதி முதல் சிறையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசலாம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சிறைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருவதாலும், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதாலும் சிறைக்கைதிகளின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை www.prisoners.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 7 மத்திய சிறைகள் மற்றும் 5 பெண்கள் சிறைகளுக்கு தனித்தனியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறைக்கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பாக தொலைபேசி அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கைதியை அவரது குடும்பத்தினர்களில் ஒருவர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்ப்படும் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.