• Home
  • இந்தியா
  • சிறுபான்மையினர் சித்ரவதை : இம்ரான் கான் வேண்டுகோள்..
இந்தியா

சிறுபான்மையினர் சித்ரவதை : இம்ரான் கான் வேண்டுகோள்..

‘மோடி சஹாப் ஏதாவது செய்யுங்கள், சிறுபான்மையினர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்’ என்று கூறி இம்ரான் கான் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்தியாவில் தஞ்சம் கோரி உள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நியாயமற்ற முறையில் தாக்குதல் நடப்பது மீண்டும் அம்பலமாகி உள்ளது.

கைபர் பக்தூன் குவா (கே.பி.கே) சட்டசபையில் பாரிகோட்டில் இருந்து பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் (பி.டி.ஐ கட்சி) 43 வயதான முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார், அரசியல் தஞ்சம் கோருவதற்காக தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்து உள்ளார். பல்தேவ் குமார் இனி பாகிஸ்தானுக்கு திரும்ப விரும்பவில்லை. இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட சிறுபான்மையினர் மீது பாகிஸ்தானில் வழக்குத் தொடரப்படுவதாக கூறி உள்ளார்.

2016 ஆம் ஆண்டில், அவரது தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. படுகொலை செய்யப்பட்டார். பல்தேவ் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 2018 ல் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் மட்டுமல்ல, இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சிறுமிகள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு முஸ்லீம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட பல சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. அதில் இருந்து இந்த வன்முறை சம்பவங்கள் வந்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தான் தனது சொந்த சிறுபான்மையினருக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்பதே உண்மை.

Related posts

காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க நினைத்த பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு..

dhinasakthi news

உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

admin

அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இந்திய ஆய்வு மையம் – விஞ்ஞானி சிவதாணு பிள்ளை

dhinasakthi news

Leave a Comment