வரவர அழகின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது :நடிகை சமந்தா

வரவர அழகின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது :நடிகை சமந்தா

நான் பெரிய அழகி இல்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“சமந்தா நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். ராணி மாதிரி தெரிகிறாய் என்றெல்லாம் என்னை பார்த்து பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒன்றும் பெரிய அழகி இல்லை. மேக்கப் போட்டு, நல்ல ஆடைகள் அணியவைத்து கேமரா முன்னால் நிற்க வைத்தால் எனது வயது இருக்கும் எல்லா பெண்களுமே அழகாய்த்தான் இருப்பார்கள். எனக்கு கல்லூரி நாட்களில் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. வரவர அழகின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது. இரண்டு மூன்று ஆண்டுகள் போனால் இந்த அழகு, மென்மை எல்லாம் போய் விடும். அதனால் நான் அழகை பற்றி கண்டு கொள்வது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல குணாதிசயம்தான் முக்கியம். வயது ஏற அழகு குறையலாம். ஆனால் கேரக்டர் மட்டும் சாகும்வரை மாறாது. நம்மால் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பேன். கெட்டது மட்டும் நம்மால் யாருக்கும் நடக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.” இவ்வாறு சமந்தா கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )