ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்

ரஜினியுடன் நடிக்கும் சித்தார்த்

ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர்.

ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிப்பதாகவும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் தகவல் பரவி உள்ளது. முத்து படத்துக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் மீனா நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது.

ரஜினிகாந்த், குஷ்பு, மீனா ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினியின் அறிமுக பாடல் காட்சியையும் படமாக்கினர். படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன்பு முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். தற்போது 2-வது கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிறார்.

இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் சித்தார்த் நடிக்கிறார். ரஜினி படத்துக்கு மன்னவன் என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )