மனைவிக்கு வெங்காய கம்மல் பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்

மனைவிக்கு வெங்காய கம்மல் பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்

மனைவி டிவிங்கிள் கண்ணாவுக்கு ரஜினிகாந்த் பட வில்லன் அக்‌ஷய்குமார் வெங்காய கம்மல் பரிசளித்து உள்ளார்.
மும்பை

நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாதவகையில் உயர்ந்து உள்ளது.பொருளாதார மந்தநிலைக்கு ஈடாக நாடு முழுவதும் அதிகமாகப் பேசப்படும் இப்போதைய பிரச்சினை வெங்காய விலையேற்றம்தான்.

இந்தியர்களின் உணவில் முக்கியப் பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஒரு மாதமாக உயர்ந்து நிற்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 150 ரூபாயையும் தாண்டியது. சந்தையில் போதிய அளவு வெங்காய வரத்து இல்லாததால் எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவு வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதனால் வெங்காயம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

இதை வைத்து சமூக வலைதளங்களில் கிரியேட்டர் மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காயத்தை வைத்து கம்மல் செய்து பரிசாக வழங்கி உள்ளார். இதனை டிவிங்கிள் கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் டிவிங்கிள் கண்ணா கூறி இருப்பதாவது:-

சில நேரங்களில் இது மிகச் சிறிய விஷயங்கள், வேடிக்கையான விஷயங்களாகி விடுகிறது. நீங்கள் அவற்றை அனுபவிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அதனால் நான் உங்களுக்காக அவற்றை பதிவிட்டு உள்ளேன் என கூறி உள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )