பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் : நடிகை சோனா

பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் : நடிகை சோனா

என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் என நடிகை சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை

தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி உள்ளார். சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன்” என்று சோனா குறிப்பிட்டு இருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.

‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வேறு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை சோனா, “பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். இயக்குநர் பாலு மகேந்திரா போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதிக கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன்.

இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்”

இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.

பச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

கவர்ச்சிக்கு மறுப்பதால் ஒதுக்குகின்றனர் நடிகை சோனா வருத்தம்

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )