திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் பாலாசிங் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
சென்னை,

திரைப்பட நடிகர் பாலாசிங் (வயது 67) உடல் நலக்குறைவால் காலமானார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாலாசிங், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

நாசர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் நடிகர் பாலா சிங் அறிமுகமானார். இந்தியன், ராசி, உல்லாசம், சிம்மராசி, என்.ஜி.கே போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )