தர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்

தர்பார் படத்துக்குரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. ரஜினி போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ்பாபு, சல்மான்கான் மற்றும் மோகன்லால் சமீபத்தில் வெளியிட்டனர். போஸ்டரில் போலீஸ் சீருடையில் ரஜினி கம்பீரமாக இருந்தார். ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயர் கொண்ட பேட்ஜையும் சட்டையில் அணிந்து இருந்தார்.

படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் டிசம்பர் 7-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி வருகிறார். ஸ்டூடியோவில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க ரஜினி தயாராகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஜோதிகா, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. ஜோதிகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )