“சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” : நடிகை தமன்னா

“சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” : நடிகை தமன்னா

“வித்தியாசமான கதாபாத்திரங்களில், சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” என்று நடிகை தமன்னா கூறினார்.
சென்னை,

விஷால்-தமன்னா ஜோடியாக நடித்து, சுந்தர் சி. டைரக்டு செய்துள்ள ‘ஆக்‌ஷன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

“ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். இயக்குனர் சுந்தர் சி.யுடன் பணிபுரியும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா? என்று சந்தேகப்பட்டேன். அவருடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன். ‘பாகுபலி’ படத்தில் சண்டை காட்சிகள் நிறைய இருக்கும் என்று ஆவலாக இருந்தேன். அந்த கனவை ‘ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் சுந்தர் சி. நிறைவேற்றி இருக்கிறார்.

மற்ற படங்களை விட, இந்த படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது. ‘ஆக்‌ஷன்’ கதாபாத்திரம் என்பதால் வசனங்களை கொண்ட பேப்பர் இருக்காது. விஷாலுடன் நடித்ததில், நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இது, அவர்களின் ரசனைக்குரிய படமாக இருக்கும்.”

இவ்வாறு தமன்னா பேசினார்.

விஷால் பேசும்போது, “நான் நடித்த படங்களில் அதிகமான சண்டை காட்சிகளை கொண்ட படம், இதுதான். ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது, என் மரணத்தை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். டைரக்டர் சுந்தர் சி. பேசும்போது, “ராணுவம், தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது. படத்தில் வில்லி கிடையாது. வில்லன் இருக்கிறார். அந்த வில்லன் யார்? என்பது, ‘சஸ்பென்ஸ்” என்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )