சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள் : டைரக்டர் அமீர்

சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள் : டைரக்டர் அமீர்

சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடுகிறது என்று பட விழாவில் டைரக்டர் அமீர் பேசினார்.

அசோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி உள்ள படம் மாயநதி. அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பவதாரிணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் அமீர் கலந்து கொண்டு பேசியதாவது:-

“தமிழ்நாட்டில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்தான் பெரிய கலைஞர்கள். அவர்களை பற்றிய பதிவுகள் வேண்டும். இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா செய்ய வேண்டும். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடுகிறது.

இங்கு பொது விஷயங்களை பேசினால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்தேன். சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். மாயநதி படம் வெற்றியடைய வேண்டும்.

சந்தனத்தேவன் என்ற படத்தை தயாரித்தேன். 35 நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தி விட்டேன். அந்த படத்துக்கு பைனான்ஸ் செய்தவர்கள் நீ பொதுவெளியில் அரசியல் பேசக்கூடாது, சம்மதித்தால் பணம் தருகிறோம் என்றனர். என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம். அப்படி ஒரு சினிமாவை என்னால் எடுக்க முடியாது. நான் நானாகவே இருப்பேன்.”

இவ்வாறு அமீர் பேசினார்.

விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )