கொரோனாவில் இருந்து விடுபட முக கவசம் அணியுங்கள்: நடிகர் விவேக்

கொரோனாவில் இருந்து விடுபட முக கவசம் அணியுங்கள்: நடிகர் விவேக்

கொரோனாவில் இருந்து விடுபட முக கவசம் அணியுங்கள் என நடிகர் விவேக் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

நடிகர் விவேக் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

நாம் சுமார் 25 நாட்களாக ஊரடங்கில் இருந்துள்ளோம். இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க போகிறோம். இவ்வளவு நாள் இருந்தது முக்கியம் இல்லை. இன்னும் இருக்கப்போகிற நாட்கள் ரொம்ப முக்கியம்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தொற்று என்பது குறைவுதான். அதற்கு காரணமே நாம் ஊரடங்கை கடைபிடித்ததால்தான்.

இதை இன்னும் குறைத்து மொத்தமாக இதில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் அடுத்து இருக்கப்போகிற நாட்களில் நாம் கண்டிப்பாக வாய், மூக்கு இரண்டையும் மறைக்கிற முக கவசத்தை அணிய வேண்டும்.

கண்கள் பற்றி கண் மருத்துவரிடம் கேட்டபோது, அதனால் ஆபத்து இல்லை என்றார். எனவே மூக்கும், வாயும் முக கவசத்தால் மூடப்பட்டு இருப்பது ரொம்ப முக்கியம். மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே சென்றால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சாப்பாட்டுக்கு மிளகு ரசம் முக்கியம் என்பதை போல முகத்துக்கு முக கவசம் முக்கியம். எனவே மறந்து விடாமல் கண்டிப்பாக முக கவசம் அணியுங்கள்.

இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )