• Home
  • தமிழகம்
  • சமூகப் பொருளாதார ஆய்வு குறித்த 5 நாள் மண்டலப் பயிற்சிக் கருத்தரங்கு: சென்னையில் டிச. 17-ல் தொடங்குகிறது
தமிழகம்

சமூகப் பொருளாதார ஆய்வு குறித்த 5 நாள் மண்டலப் பயிற்சிக் கருத்தரங்கு: சென்னையில் டிச. 17-ல் தொடங்குகிறது

சமூகப் பொருளாதார ஆய்வு குறித்த 77-வது சுற்று மண்டலப்  பயிற்சிக் கருத்தரங்கு 17.12.2018 தொடங்கி, 21.12.2018-வரை சென்னையில் நடைபெறவுள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (களச் செயல்பாடுகள் பிரிவு) கள அலுவலர்களுக்கான நேரப் பயன்பாட்டு ஆய்வுப் பயிற்சியும் இதில் அளிக்கப்படும்.

மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த ஐந்துநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகளின் நிதி மற்றும் புள்ளிவிவரங்கள் துறைகளிலிருந்து பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள்.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (களச் செயல்பாடுகள் பிரிவு) தமிழ்நாடு (வடக்கு) மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ். துரைராஜு, டிசம்பர் 17-அன்று கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார். தொழில்நுட்ப அமர்வுகளைப் புள்ளிவிவரத் துறையின் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் துணை இயக்குநர் திருமதி பி.ரம்யா நடத்துவார்.

பயிற்சிக்கான நோக்கம்:

ஒவ்வொரு வீட்டினரும் கொண்டுள்ள நிலம் மற்றும் கால்நடைகள் பற்றிய விவரங்களும், விவசாயிகளின் நிலைமை பற்றிய மதிப்பீடும் கடன் மற்றும் முதலீட்டு விவரங்களும் 77-வது சுற்று ஆய்வின் முக்கிய அம்சங்களாகும். இந்த ஆய்வு வரும் ஜனவரியில் தொடங்கி, டிசம்பர் வரை ஓராண்டு காலத்திற்கு நடைபெறும்.

இந்தத் தகவல்கள் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளுக்கும் வேளாண் செலவு மற்றும் விலைகள் குறித்த ஆணையத்திற்கும் தேசிய கணக்குகள் பிரிவுக்கும் பயன்படும். மேலும், ஆராய்ச்சியாளர்களும், கொள்கை உருவாக்குவோரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆய்வின் காலம்:

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (களச் செயல்பாடுகள் பிரிவு) முதல்முறையாக நேரப் பயன்பாடு குறித்த ஆய்வையும் நடத்தவிருக்கிறது. ஒவ்வொரு தனிநபரும் செலவிடும் நேரம் பற்றிய இந்த ஆய்வும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31-ஆம் தேதிவரை நடைபெறும்.

ஆண்கள், பெண்கள் மற்ற பிற குழுவினர் ஊதியம் பெற்று அல்லது பெறாமல் ஈடுபடும் பணிகள் குறித்த ஆய்வு இதன் முக்கிய நோக்கமாகும். ஊதியம் பெறாமல் செய்யப்படும் தன்னார்வப் பணி, வீட்டு வேலைகள் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் நேரம் பற்றிய தகவல் இந்த ஆய்வில் முக்கியமானதாக இருக்கும். மேலும், கற்றல், சமூக சேவை, பொழுதுபோக்கு செயல்பாடுகள், தன்னை கவனித்துக் கொள்வதற்கான செயல்பாடுகள் போன்ற விவரங்களும் இதில் சேகரிக்கப்படும்.

வேண்டுகோள்:

தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்படும் இந்தத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். மற்ற துறைகள் உட்பட எவருக்கும் இவை தெரிவிக்கப்படமாட்டாது.  இதற்காகத் தங்களை நாடிவரும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (களச் செயல்பாடுகள் பிரிவு) கள அலுவலர்களுக்கு சரியான, மதிப்புமிக்க, உண்மையான தகவல்களை வழங்கி, பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளித்து தேசக் கட்டமைப்பு நடைமுறைக்கு பங்களிப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

dhinasakthi news

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருளிலுமா முறைகேடு?- டிடிவி தினகரன்

dhinasakthi news

ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசம்

dhinasakthi news

Leave a Comment