இணையம் போன்ற நவீன வசதிகளையும் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் : துணைவேந்தர் நா.இராஜேந்திரன் பேச்சு.

இணையம் போன்ற நவீன வசதிகளையும் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் : துணைவேந்தர் நா.இராஜேந்திரன் பேச்சு.

அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் கவிச்செம்மல் ரெ.முத்துக்கணேசனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு தமிழ்த்துறை கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் மாணவர்களும் ஆய்வாரள்களும் தரமான கட்டுரைகளை, படைப்புகளை உலகத் தர நிர்ணய இதழ்களில் வெளியிட வேண்டும் என்றும், தினந்தோறும் நூலகம் சென்று நூல்களைத் தேடிப் பயில வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கவிதை, கட்டுரை, திறனாய்வு, படைப்புத்திறன் மற்றும் ஆராய்ச்சித் திறனையும் சிரத்தையுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இணையம் போன்ற நவீன வசதிகளையும் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பாகை. கண்ணதாசன் கவிஞர் ரெ.முத்துக்கணேசனார் அவர்களின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பிற நூல்களிலிருந்து இன்றைய மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பின்பற்றக்கூடிய அறக்கருத்துக்கள் மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்துரைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் மு.பாண்டி வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கப் பொறுப்பாளர் இணைப்பேராசிரியர் மு.நடேசன் நன்றி கூறினார். நகரப் பிரமுகர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )