கணிதம் அனைத்து அறிவியல் பிரிவுகளின் ராணி : துணைவேந்தா .நா.இராஜேந்திரன் பேச்சு.

கணிதம் அனைத்து அறிவியல் பிரிவுகளின் ராணி : துணைவேந்தா .நா.இராஜேந்திரன் பேச்சு.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறை மற்றும் இராமானுஜர் உயர்கணித மையம் சார்பில் “அறிவியல் மற்றும் பொறியியலில் கணித மாதிரிகள் மற்றும் நவீன கணக்கீட்டு முறைகள்” என்ற தலைப்பிலான மூன்று நாள் பன்னாட்டு கருத்தரங்கின் தொடக்க விழா நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறைத் தலைவா .நீ.அன்பழகன் இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கங்கள் குறித்து விளக்கினார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா .நா.இராஜேந்திரன் கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமது உரையில், நமது அன்றாட வாழ்வில் கணிதவியலின் பயன்பாட்டைப் பற்றியும், உயர்கல்வி ஆராய்ச்சிகளில் கணித மாதிரிகளின் சிறப்பைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் அவர் கணிதம் அனைத்து அறிவியல் பிரிவுகளின் ராணி எனக் குறிப்பிட்டார். நமது அன்றாட வாழ்வில் கணிதமும், வரலாறும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக்கழக மார்ட்டின் போனர், துருக்கியின் சங்கையா பல்கலைக்கழக டிமிட்டுரு பலேனு, ஆஸ்திரேலியாவின் டீக்கன் பல்கலைக்கழக சீ பெங் லிம், ஐக்கிய அமீரக பல்கலைக்கழக பேரா. பதெள்ள ரீகான், தாய்லாந்தின் கிங் மாங்குட் பல்கலைக்கழக பூம் குமாம், ருமேனியாவின் ஆரெல் விலாய்சு பல்கலைக்கழக வலென்டினா எமீலியா பலாஸ் மற்றும் இங்கிலாந்தின் டெர்பி பல்கலைக்கழக .ஓவிடியு பாக்டாஸசர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இங்கிலாந்து, ருமேனியா துருக்கி மற்றும் தாய்லாந்து நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அழகப்பா பல்கலைக்கழகத்துடன் உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

315-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இப்பன்னாட்டு கருத்தரங்கில் பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.இ.ஆர், என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.டி – லிருந்து ஆராய்ச்சியாளர்கள், கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 575-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான மூன்று விருதுகள் வழங்கப்பட்டது.

நிறைவாக அழகப்பா பல்கலைக்கழக இராமானுஜர் உயர்கணித மைய இயக்குநர் (பொ) மற்றும் கருத்தரங்கின் அமைப்பாளர் முனைவர் ஆர்.ராஜா நன்றி கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )