ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் பயிற்சிப் பணி! 6060 பேருக்கு வாய்ப்பு!

ராணுவ ஆயுத தொழிற்சாலைகளில் பயிற்சிப் பணி! 6060 பேருக்கு வாய்ப்பு!

இந்திய ராணுவம், மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் மாநிலக் காவல் துறைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்துவருகிறது Indian Ordnance Factories. நாடுமுழுவதும் 24 நகரங்களில் சுமார் 40 தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இத்தொழிற்சாலைகளில் ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், ப்ளம்பர், எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பணிகளுக்கு சுமார் 6060 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி

இப்பயிற்சிப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப் போகும் தொழிற்பிரிவுக்கேற்ப 50 % மதிப்பெண்களுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு 9.2.2020 நாளின்படி 15 வயது முதல் 24 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ-யில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு நாடுமுழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பயிற்சிப் பணிக்கு அமர்த்தப்படுவர்.

உதவித்தொகை

மாநிலத்தின் Semi-Skilled ஊழியர்கள் பெறும் மாதச்சம்பளத்தில் 70 முதல் 90% வரை மூன்று வருடப் பயிற்சிக் காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ofb.gov.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.மேலும் அதிக தகவல்களுக்கு www.ofb.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )