எல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை! 540 பேருக்கு வாய்ப்பு!

எல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை! 540 பேருக்கு வாய்ப்பு!

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிக்கும் துறை எல்லை சாலைகள் கழகம் (BORDER ROADS ORGANISATION – BRO) என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் ‘மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் எஞ்சின் ஸ்டேட்டிக்)’ பிரிவில் 540 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். இதனுடன் மெக்கானிக் மோட்டார் / வெஹிக்கிள்ஸ் / டிராக்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பு சலுகை உண்டு. இப்பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, செய்முறைத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் ‘Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2019.

மேலும் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )