• Home
  • தமிழகம்
  • எல்லோர்க்கும் எங்கும் இன்பம் தரும் இனிய ஆண்டாக அமைய வேண்டும்:ஸ்டாலின்
தமிழகம்

எல்லோர்க்கும் எங்கும் இன்பம் தரும் இனிய ஆண்டாக அமைய வேண்டும்:ஸ்டாலின்

எல்லோர்க்கும் எங்கும் இன்பம் தரும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

01.01.2019 அன்று புத்தாண்டு பிறப்பு என்பது, புத்துணர்வு தோன்றுவது, புதிய பயணம் தொடங்குவது. அது ஆங்கில ஆண்டு மாற்றம் என்பது மட்டுமல்ல, நமது ஆளுமையின் பரிணாம வளர்ச்சி மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வேண்டும். அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, தனிமனிதர்களின் தொகுப்பான ஒரு சமூகத்துக்கும், சமூகங்களின் கூட்டான நாட்டுக்கும் அது தான் இலக்கணம்.

தொடர்ந்து அத்தகைய வளர்ச்சியை நோக்கிய உதயக்கதிரொளி பாய்ச்சுவதாக புதிய ஆண்டு, எங்கும் இன்பம் தரும் எல்லோருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும், அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அத்தகைய தன்னம்பிக்கையுடன் புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம். தமிழ் நாட்டவருக்கும், உலகத்தமிழருக்கும், அனைத்துக்கட்சித் தோழர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அனைவருக்கும் எனது அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

Related posts

கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் தடையை மீறினால் அபராதம்; தமிழக அரசு அறிவிப்பு

dhinasakthi news

மீண்டும் பன்னீர் செல்வத்தை தமிழக முதல்வராக்க திட்டம்- தங்க தமிழ்ச்செல்வன்

admin

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம். வீரப்ப மொய்லி பேட்டி

dhinasakthi news

Leave a Comment