cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை - Dhinasakthi

எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை

எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
பிஜீங்,

சீனா-இந்தியா இராணுவங்கள் இடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலால் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு நாடுகள் சார்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலும் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 9 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

இந்நிலையில் சிக்கிம் எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில்,

இந்திய எல்லையில் அமைதியை நிலைநாட்ட சீன ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.