ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தல்

ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தல்

நைஜீரியா அருகே பயணித்த ஹாங்காங் நாட்டு கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.
போனி,

ஹாங்காங் நாட்டை சேர்ந்த எம்.டி. நேவ் கன்ஸ்டெல்லேசன் என்ற எண்ணெய் கப்பல் நைஜீரியா நாட்டின் போனி கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 26 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென அந்த கப்பலில் குதித்த கடற்கொள்ளையர்கள் அங்கிருந்த 18 இந்தியர்கள் மற்றும் ஒரு துருக்கி நாட்டினர் உள்பட 19 பேரை கடத்தி சென்றனர்.

இதுபற்றிய தகவல், நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு கிடைத்தது. இதனை அடுத்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். கப்பலில் மீதமிருந்த 7 பேரும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கப்பலை கொண்டு சென்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )