மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாலே,

2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மாலத்தீவின் அதிபராக இருந்தவர் அப்துல்லா யாமீன். கடந்த ஆண்டு நடந்த பொதுதேர்தலில் அவர் தோல்வியடைந்த பிறகு, அவரது ஆட்சிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சுமார் 10 லட்சம் டாலா் (சுமாா் ரூ.7.1 கோடி) முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், மாலத்தீவு முன்னாள் அதிபா் யாமீன் அப்துல் கயூமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு 50 லட்சம் டாலா் (சுமாா் ரூ.35.7 கோடி) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )