பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,276 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,276 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 16,276 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்,

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்து 40 ஆயிரத்து 038 ஆக உள்ளது. கொரோனாவுக்கு உலகமெங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 877 ஆக உள்ளது.

பாகிஸ்தானிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 16,276 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கொரோனா வைரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 6,220 பேரும், சிந்து மாகாணத்தில் 6,053 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச இறப்பு பதிவாகி இருந்தது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றில் 75 சதவீதம் சமூகப் பரவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )