கோமாவில் இருந்த தாய் : குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த அதிசயம்!

கோமாவில் இருந்த தாய் : குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த அதிசயம்!

அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரான்சிஸ்கோ,

வடக்கு அர்ஜென்டினா மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் மூன்று குழந்தைகளுக்கு தாயான 42 வயது பெண் மரியா லாரா ஃபெரேரா. கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம ஆசாமி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தன் சுயநினைவை இழந்தார்.

அதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

ஃபெரேரா மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும். ஆகவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படி குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தனர். இதனை கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர் செய்வதறியாது சோகத்தில் ஆழ்ந்தனர்.

நம்பிக்கையுடன் ஃபெரேராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்குமாறு கோரினார் அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ. இப்படியிருக்க கடந்த வாரத்தில் ஒரு நாள் ஃபெர்ரேராவின் இளைய மகள் (2 வயது) மருத்துவமனைக்கு வந்து பாசத்துடன் அவர் அருகில் சென்றாள்.

பின்னர் வீட்டில் வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாயிடம் கண்ணீர் விட்டு கேட்டிருக்கிறாள். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த ஃபெரேரா, தன் குழந்தை மழலையின் குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்பால் கொடுத்துள்ளார். இதை பார்த்த ஃபெரேராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிசயத்தின் விளிம்பிற்கே சென்று விட்டனர்.

தனது மனைவி மீண்டும் திரும்பி விட்டாள் என்று அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். தாய்மை உணர்வை பார்த்து அவரது குடும்பத்தினர் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் மரியா லாரா ஃபெரேரா இன்னும் முழுமையாக சுயஉணர்வை அடையவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )