கொரோனா எதிரொலி: தென்கொரியாவில்  ஹூண்டாய் தொழிற்சாலை மூடல்

கொரோனா எதிரொலி: தென்கொரியாவில் ஹூண்டாய் தொழிற்சாலை மூடல்

கொரோனா எதிரொலியாக தென்கொரியாவில் ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
சியோல்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2,788 ஆக உயர்ந்துள்ளது. சீனா மட்டும் அல்லாது, தென்கொரியா , ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இங்கு ஆண்டு தோறும் சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவிற்கு அடுத்த படியாக தென்கொரியாவிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருவதால் ஹூண்டாய் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில் இன்று மேலும் 256 கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )