உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2.94 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2.94 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2.94 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,

உலகம் முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 33 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 லட்சத்து 36 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 676 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 981 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 390 பேர் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 71 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

கொரோனா மொத்த பாதிப்பில் ரஷியாவை மராட்டிய மாநிலம் முந்தி உள்ளது. ரஷியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320; மராட்டியத்தில் பாதிப்பு 10,77,374 ஆக உள்ளது. அதே போல கொரோனா மரணங்களில் ஸ்பெயினை மராட்டியம் முந்தி உள்ளது. ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848; மராட்டியத்தில் 29,894

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )