இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
லண்டன்,

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா நோய் தொற்று, உலக நாடுகளை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த இங்கிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு குறைந்த அளவிலான அறிகுறிகள் காணப்படுகின்றன.

எனினும், அவர் உடல்நலமுடனேயே இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே கடந்த சில நாட்களாக வழக்கம்போல் தனது பணிகளை செய்து வருகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதற்கும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 829 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 19,603 பேர் பலியாகி உள்ளனர். அதிக அளவாக இத்தாலியில் 6,820 பேர் பலியாகி இருக்கின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )