வேட்பாளர்களின் குற்ற பின்னணி வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சரியான முடிவு : கபில் சிபில்

வேட்பாளர்களின் குற்ற பின்னணி வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சரியான முடிவு : கபில் சிபில்

வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது சரியான முடிவு என்று கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இனி வரும் காலங்களில் கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும் வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தையும் அரசியல் கட்சிகள் 48 மணிநேரத்துக்குள் இணையதளம், சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில்
கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது. குற்றவாளிகள் அரசியலில் நுழைந்துள்ளனர் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே அரசியல் கட்சிகளை மக்கள் கேள்விகளை கேட்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )