பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் : மம்தா பானர்ஜி

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் : மம்தா பானர்ஜி

டெல்லி வன்முறைக்கு அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரி உள்ளதே என்ற கேள்விக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், அரசியல் விவாதங்கள் பிறகு தான் என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
புவனேஸ்வர்

பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கவுன்சிலின் கூட்டம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் படநாயக் ,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கு ஒடிசா முதல்வர் அவரது வீட்டில் மதிய உணவு விருந்தளித்தார்.

டெல்லியில் நடந்த வன்முறை மிகவும் வருத்தமளிக்கிறது. அது நடந்திருக்கக்கூடாது. போலீஸ்காரர் மற்றும் உளவு அதிகாரி உள்பட பலர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும், டெல்லியில் அமைதி திரும்ப வேண்டும் என கூறினார்.

வடகிழக்கு டெல்லியில் வன்முறையை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரி உள்ளதே என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜி இப்போதே, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், அரசியல் விவாதங்கள் பின்னர் நடைபெறலாம் என கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )