டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி,

இந்திய குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ பங்கேற்கிறார்.

இதற்காக தனது மகள் லாரா போல்சனரோ, மரு மகள் லெடிசியா பிர்மோ, 8 மந்திரிகள் 4 எம்.பி.க்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவுடன் நேற்று முன்தினம் அவர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டு பிரேசில் அதிபரை சிறப்பாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, ராணுவம், பாதுகாப்பு, மருத்துவம், அறிவியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதைப்போல முதலீட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், பிரேசில் வெளியுறவு மந்திரி எர்னெஸ்டோ அரஜோவும் கையெழுத்திட்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )