கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது: சுகாதார துறை

கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது: சுகாதார துறை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்கவில்லை என சுகாதார துறை கூறி உள்ளது.

புதுடெல்லி

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய் பாதிப்புக்கு பிறகு – கடந்த 24 மணி நேரத்தில் 43 வரை புதிய பாதிப்புகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை இன்றுமேலும் 13 உயர்ந்து உள்ளது, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 593 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பு விகிதம் கட்டுப்பட்டு வருகிறது அல்லது குறைந்து வருகிறது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது ஒரு ஆரம்ப போக்காக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்புகளின் விகிதம் குறைந்துவிட்டதை நாங்கள் கவனித்திருக்கிறோம், ஆனால் அதற்காக இந்த நேரத்தில் நாங்கள் ஓய்வாக இல்லை என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதை “நிலையான அல்லது மெதுவான வளர்ச்சி” என அந்த அதிகாரி கூறினார், “தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கண்காணிக்கப்பட வேண்டும் … சமூக தூரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,

மாநில உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மேலும் மூன்று மரணங்களை அறிவித்துள்ளனர் – மராட்டியம்,தமிழ்நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா ஒன்று – ஆனால் மத்திய அரசை இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையில், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்ட மொஹல்லா கிளினிக் மருத்துவருடன் தொடர்பு கொண்ட 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )