கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்தை முற்றிலும் முடக்க வேண்டும்: ராஜ் தாக்கரே

கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்தை முற்றிலும் முடக்க வேண்டும்: ராஜ் தாக்கரே

கொரோனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்தை முற்றிலும் முடக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
மும்பை,

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதேபோல அவர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘பஸ், ரெயில் சேவைகள் போல மற்ற அனைத்து வகையான வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்பட வேண்டும். கொரோனா விவகாரம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் பேசினேன். முன்பு டாக்டர்களை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள், தற்போது அவர்கள் செய்த தவறை உணர்ந்து இருப்பார்கள்’’ என்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )