குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் பிரேசில் அதிபர்

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் பிரேசில் அதிபர்

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ இந்தியா வந்தடைந்தார்.
புதுடெல்லி,

இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று டெல்லியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு விவகாரங்கள் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அவருக்கு, நாளை ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கிறார்.

இந்தியா – பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்திலும், மெசியாஸ் பங்கேற்க உள்ளார். இத்துடன் மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 27ம் தேதி பிரேசில் திரும்புகிறார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )