கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்வு

கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்வு

கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் நாள்தோறும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 33050- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது.

கொரோனா பாதிப்பில் 11-வது இடம் வகிக்கும் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 223 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )