எங்கும் அமைதி நிலவட்டும் என வேண்டி கொள்கிறேன் : பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

எங்கும் அமைதி நிலவட்டும் என வேண்டி கொள்கிறேன் : பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து

பிரதமர் மோடி மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
புதுடெல்லி,

இஸ்லாமிய இறைதூதர் முகமது நபியின் பிறந்தநாள் இன்று மிலாது நபி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இதுபற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிலாது நபிக்கு எனது வாழ்த்துகள். நபிகளாரின் எண்ணங்களான நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு சமூகத்தில் அதிகரிக்கட்டும் என்று தெரிவித்து உள்ளார். எங்கும் அமைதி நிலவட்டும் என வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )