இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை : ராஜ்நாத்சிங் பேட்டி

இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை : ராஜ்நாத்சிங் பேட்டி

இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்,

சீன ராணுவத்தினரால் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக அந்நாட்டையொட்டிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் பிரச்சினை ஏற்பட்டால் பாதுகாப்புப் படை வீரர்கள் அதை கவனித்து கொள்வார்கள் என்றும், இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை. ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 10 வயது சிறார்கள் இடையேயும் தீவிரவாத கருத்துகள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத்சிங்,

அங்குள்ள சிறார்களும் நமது நாட்டினர் தான் அவர்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் காண வேண்டாம். சில நேரங்களில் மக்கள் அவர்களை சரியான முறையில் ஊக்குவிப்பதில்லை.

அவர்கள் தவறான திசையில் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும், தவறான திசையில் அவர்களை ஊக்குவிப்பவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )